- திருச்சி
- முதல் அமைச்சர்
- சென்னை
- திமுக
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: திமுக வரலாற்றில் திருப்புமுனைகளுக்கு எல்லாம் அடித்தளமிட்ட திருச்சியில் இன்று கூடுவோம். வெல்வோம் 200, படைப்போம் புது வரலாறு என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்-தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை முன் கூட்டியே முரசறைந்து அறிவிக்கும் வகையில் திருச்சியில் இந்த பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.
திருச்சி திமுக மாநாடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளம் பதிவு: திமுக வரலாற்றில் திருப்புமுனைகளுக்கு எல்லாம் அடித்தளமிட்ட திருச்சியில் மார்ச் 9(இன்று) கூடுவோம். StalinStatement-ல் சொன்னதெல்லாம் நனவாக அடுத்த 5 ஆண்டுகளும் திமுக ஆட்சி தான் என்பதை உறுதிசெய்வோம். மலைக்கோட்டை மாநகரின் மாநாடு மற்றுமொரு மகத்தான வெற்றியைப் பெறும் ஊக்கத்தை உடன்பிறப்புகளுக்கு வழங்கிடட்டும். உறுதியாகச் சொல்கிறேன். வெல்வோம் 200, படைப்போம் புது வரலாறு.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திமுக தலைமை கழகம் திருச்சியில் இன்று நடைபெற உள்ள மாநாடு தொடர்பான வீடியோவை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க, திருச்சி சிறுகனூர் மைதானத்தில் மார்ச் 9ம் தேதி(இன்று) மக்கள் கடலென ஒன்றுகூடுவோம்! விடியலைத் தொடர, உதயசூரியன் மீண்டும் உதிக்கட்டும்’’
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
