×

மகளிர் நலத்திட்டங்கள் மென்மேலும் தொடர முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

 

சென்னை: இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத்திட்டங்கள் மென்மேலும் தொடர, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி-\\”வெல்லும் தமிழ்ப்பெண்கள்\\” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு. இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம். மகளிர் உயர மாநிலம் உயரட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Udhayanidhi Stalin ,Chennai ,Deputy Chief Minister ,India ,Deputy ,International Women's Day ,
× RELATED உலகப் பத்திரிகைகளே சூப்பர் ஸ்டார்...