×

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள்

*நகராட்சி ஆணையர் ஆய்வு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நகர்ப்புற குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சிக்குட்பட்ட நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்க ரூ.9 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து சிவசண்முக நகர் பகுதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், மரைக்காயர் நகர் பகுதியில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், ஜம்புலிங்கம் பூங்கா வளாகத்தில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

ஜம்புலிங்கம் பூங்கா வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியை நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பணியை துரிதமாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர். நகராட்சி பொறியாளர் கண்ணன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Nellikuppam Municipality ,Nellikuppam ,Nellikuppam Municipality Administration ,Water Supply Department ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக...