×

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 70 சதவீதம் முடிந்த சம்பா தாளடி அறுவடை பணிகள்

*51 இடங்களில் நெல் கொள்முதல்

திருத்துறைப்பூண்டி : மேட்டூர் அணை உரிய நேரத்தில் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் திருத்துறைப்பூண்டி விவசாயிகள் குறுவை சாகுபடியினை ஆண்டுதோறும் அதிகப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு குறுவை 19,238 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி விவசாயிகள் செய்து இருந்தனர்.

அறுவடைக்க வந்த நிலையில் தாலுகா முழுவதும் மழையில் கதிர்கள் சேதம் அடைந்த போதிலும் அறுவடை பணி முடிந்தது. அதன் பிறகு 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது.

சாகுபடி பிறகு தொடர்ந்து மழை பெய்து பெரும் சேதம் ஏற்ப்பட்டது. அதன் பிறகு சாகுபடி பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்து இருந்தனர். திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் உள்ள கிராமங்களிலும் சம்பா, தாளடி சாகுபடி, கதிர் அறுக்கும் இயந்திரம் மூலம் அறுவடை பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை சம்பா, தாளடி அறுவடை 70 சதவீதம் முடிந்துள்ளது.

அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கு தாலுகா முழுவதும் 51 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

Tags : Samba Thaladi ,Tiruthuraipoondi ,Mettur dam ,Kuruvai ,
× RELATED பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட...