×

விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் இயக்குனர் ஆய்வு

*அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் அருள்ஜோதி அரசன் நேற்று விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனையில் நடைபெறும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தையும், வாக்கூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடப்பட்டுள்ள 500 மரக்கன்றுகளையும், முண்டியம்பாக்கம் ஊராட்சியில் மன்ற கணக்குகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பத்மஜா, செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் நித்தியா, உதவி இயக்குனர்கள் ரத்னமாலா, மஞ்சுளா, பிடிஓக்கள் சையது முகமது, நாராயணன், ஒன்றிய பொறியாளர்கள் குமரன், சிந்தனா, மேற்பார்வையாளர்கள் செல்வராணி, செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Vikravandi ,Vikravandi Panchayat Union ,Chennai ,Aruljothi Arasan ,Radhapuram Local Government… ,
× RELATED 5 பஸ்கள் 66 முறை இயக்கப்படுகின்றன ஓவேலி...