×

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி

 

வாஷிங்டன்: இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28ம் தேதி நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வளைகுடா பகுதியில் அமெரிக்க படைகளின் முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடைய இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே இந்தியாவுக்கு வந்து சென்ற ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அழித்தது.

இதில் 87 பேர் பலியானார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஈரான் 7வது நாளாக மத்திய கிழக்கில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுயது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ளலாம். உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தியிருந்தது இந்தியா. ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : United States ,Russia ,Washington ,Iran ,Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,
× RELATED தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக்...