×

தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி ஜூலை 17ம் தேதி தொடக்கம்

 

சென்னை: தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியீடு. ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆக.30 வரை 45 நாட்கள் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது

தமிழகத்தில், 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு (House-listing and Housing Census) 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தொடங்கும். இது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், 33 கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் கடந்த 1872 ஆம் ஆண்டு முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும் 1881 இல் தான் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போதும் இரண்டு கட்டங்களாக நடைபெறுது வழக்கம். முதல் கட்டத்தில் வீடுகளை கணக்கிடும் பணியும், இரண்டாவது கட்டத்தில் தனி நபர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும். அவ்வகையில் தற்போது வீடுகளை பட்டியலிடுவதற்கான முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வகையான வீடு, வீட்டின் சுவர், கூரை மற்றும் தரையைக் கட்ட என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன, வீட்டின் உரிமை நிலை என்ன, வீட்டில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை, குடிநீருக்கான ஆதாரம் என்ன, எல்பிஜி, தொலைக்காட்சி, மொபைல்போன், கணினி, இணைய வசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளதா? உள்ளிட்ட 33 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன. முதற்கட்டப் பணிகள் வருகின்ற 2027 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர 3 0 வரை நடைபெற உள்ளது.

உள்ளூர் பகுதிகளின் எல்லைக்குள் இருக்கும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடு எண்ணிக்கை அட்டவணைகளின் மூலம், பொதுமக்களிடம் கேள்விகளைக் கேட்டு தரவுகளை சேகரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED கிழக்கு காங்கோவில் ருபாயா கோல்டன்...