×

மதுபாட்டில்கள் பறிமுதல்

போடி, மார்ச் 4: போடி அருகே மீனாட்சிபுரம் கண்மாய் அருகே போடி தாலுகா எஸ்.ஐ முனியாண்டி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மீனாட்சிபுரம் கன்னிமார் கோயில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (48) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் அவரை பிடித்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பார்த்திபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Bodi ,Taluka SI Muniandi ,Meenakshipuram Kanmai ,Parthiban ,Kannimar Koil Street ,Meenakshipuram ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...