×

சிறுகுளம் கண்மாயில் சிக்கிய அரிய ஆமை

சிவகாசி, மார்ச் 4: சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராசு மகன் பாலமுருகன் என்பவர் பிரண்டை செடியை பறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கண்மாயில் இருந்து அரிய வகை இனத்தைச் சேர்ந்த நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார்.

நட்சத்திர ஆமைகள் என்பது பாதுகாக்கப்பட்ட மற்றும் அழிந்து வரும் ஒரு அரிய வகை உயிரினம் என்பதால், அதனைப் பார்த்த அவர், உடனடியாக லாவகமாகப் பிடித்து சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். போலீசார் உடனடியாக அந்த ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Sirukulam Kanmai ,Sivakasi ,Balamurugan ,Rasu ,Kanmai… ,
× RELATED பழநி அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி சாவு