×

சலவை பெட்டிகள் திருட்டு

வேடசந்தூர், மார்ச் 4: வேடசந்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (70). இவர் தனது மகன்களான மாரியப்பன், சுப்பிரமணி, மணி ஆகியோருடன் வேடசந்தூர் டிஎஸ்பி அலுவலகம் எதிரே சலவை கடை நடத்தி வருகிறார். காளியம்மாள் மற்றும் அவரது மகன்கள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

இதை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுத்தியலால் பூட்டை உடைத்து 2 சலவை பெட்டிகளையும் திருடி சென்று விட்டனர். நேற்று காலை கடையை திறக்க வந்த காளியம்மாள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 2 சலவை ெபட்டிகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Vedasandur ,Kaliammal ,Vedasandoor ,Mariyappan ,Subramani ,Mani ,KALIYAMMAL ,
× RELATED பழநி அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி சாவு