×

கறம்பக்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்

கறம்பக்குடி, மார்ச். 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மைலன் கோன் பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி யில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்களின் நலன் கருதி மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் ஊராட்சி கறம்பக்குடி ஒன்றிய நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்திருந்தனர்.

அதன்படி 2023-24ம் ஆண்டில் அப்பகுதியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.20 இலட் சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்தி மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் 6 மாத காலமாகியும் இன்னும் பயன்பாட்டுக்குவரவில்லை. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உடனடியாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

 

Tags : Karambakudi ,Mylan Konpatti Panchayat ,Karambakudi Panchayat Union ,Pudukkottai District ,Adi Dravidar ,
× RELATED ஐயப்பன் கோயில்களில் மாதாந்திர சிறப்பு பூஜை