×

ஐயப்பன் கோயில்களில் மாதாந்திர சிறப்பு பூஜை

 

ராமநாதபுரம், மார்ச் 16: ராமநாதபுரம், கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி பகுதி ஐயப்பன் கோயில்களில் பங்குனி மாதம் முதல் நாள் பூஜை நேற்று நடந்தது. ஐயப்பன் கோயில்கள் தமிழ் மாதம் முதல் நாள் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்படி பங்குனி மாதம் முதல் நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லப்பை ஐயப்பன் கோயிலில் மூலவருக்கு சந்தனம், விபூதி,பால், நெய் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் மற்றும் இரவில் படி பூஜை நடந்தது. கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

Tags : Ayyappan ,Ramanathapuram ,Panguni month ,Kadalady ,Sayalgudi ,Mudukulathur ,Kamudi ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்