×

பேரம்பாக்கம் நாகசண்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

திருவள்ளூர், மார்ச் 16: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம், ஹரிஹரன் மேட்டில் 48 அடி உயரம் உள்ள தாய் நாகச்சண்டி பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சின்னமண்டலி போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கண்டு களித்தனர். இந்த கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மௌரியராஜா செய்திருந்தார்.

Tags : Perambakkam Nagachandi ,Bhagavathy Amman Temple Kumbabhishekam ,Thiruvallur ,Nagachandi Bhagavathy Amman Temple ,Hariharan Hill, Perambakkam ,Maha Kumbabhishekam ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்