- காஞ்சி அண்ணா பொறியியல் இணைப்புக் கல்லூரி பட்டமளிப்பு விழா
- காஞ்சிபுரம்
- அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இணைப்புக் கல்லூரி
- டீன் கோதண்டபாணி
- அண்ணா பல்கலைக்கழக தொலை உணர்வு நிறுவனம்
- டி. திருமலைவாசன்
காஞ்சிபுரம், மார்ச் 16: காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி டீன் கோதண்டபாணி தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக்கழக தொலை உணர்வு நிறுவன பேராசிரியர் தே.திருமலைவாசன் முன்னிலை வகித்தார். கல்லூரியில் 2021-2025ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை இந்திய அரசின் சென்னை புதிய மற்றும் மீளப்பெறக்கூடிய எரிசக்தி அமைச்சகத்தின் தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பிரிவு தலைவர் க.பூபதி வழங்கினார். மேலும், மாணவர்களின் எதிர்கால வாழ்வில் தேசபற்றுடன் செயல்படவும், நிலையான வளர்ச்சியை அடையவும் மாணவர்களை வாழ்த்தி, பேசினார்.
கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் துறை, மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை, இயந்திரவியல் பொறியில் துறையில் பட்டம் பெற்ற 259 மாணவர்களுக்கும், தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 9 மாணவர்களுக்கும் பட்டங்களை, பேராசிரியர் தே.திருமலைவாசன், இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநரும், பிரிவு தலைவருமான க.பூபதி ஆகியோர் வழங்கினர். விழாவில் உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
