×

சோலைப்புதூர் வேதமாணிக்கபுரத்தில் கோயில் கும்பாபிஷேக விழா

ஏரல், மார்ச் 3: சாயர்புரம் அருகேயுள்ள சோலைப்புதூர் வேதமாணிக்கபுரம் கன்னி விநாயகர், நாராயணசாமி, முத்தாரம்மன், பத்ரகாளி அம்மன், உச்சினிமகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடத்தப்பட்டு கோயில் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன்ராஜா, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சரவணக்குமார் ராஜூ, சாயர்புரம் நகர செயலாளர் துரைச்சாமி ராஜா, சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துராஜா, முத்துமாரி மற்றும் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Solaiputhur Vedamanikkapuram ,Kanni ,Vinayagar ,Narayanaswamy ,Mutharamman ,Bhadrakali Amman ,Uchinimakhali Amman temple ,Sayarpuram ,Deeparathan ,Yagashalai Pooja… ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...