×

இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, மார்ச் 3: தர்மபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில், நேற்று பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாநில தலைவர் பட்டாபிராமன், மாவட்ட செயலாளர் பிரதாபன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட நார்த்தம்பட்டி அருந்ததியர் கிராம மக்களுக்கு ஏ.ரெட்டிஅள்ளியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், மாதையன், பாலன், ரவி, பச்சாகவுண்டர், அலமேலு, ராஜகோபால், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : E. Communist ,Dharmapuri ,Dharmapuri district ,Indian United Communists ,District Executive Committee ,Raju ,State President ,Pattapiraman ,District Secretary ,Prathapan… ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...