பெய்ரூட: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். லெபனான் தலைநகரின் புறநகர் பகுதிகளில் 20 பேர் பலி; 91 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு லெபனான் பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 58 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதையடுத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
