×

வத்தலக்குண்டுவில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வத்தலக்குண்டு, மார்ச் 2: வத்தலக்குண்டுவில் நகர திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  வடக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னத்துரை, பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணை தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், வெல்லும் தமிழ் பெண்கள் மூலம் மகளிரணியினர் வீடுதோறும் அரசின் சாதனை திட்டங்களை எடுத்து செல்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் பொறுப்புகுழு உறுப்பினர்கள் முருகேசன், சகாப்தின், துணை செயலாளர்கள் மகேந்திரன், முருகேசன், சுமதி குமரவேல், அவை தலைவர் அக்கீம், பொருளாளர் ரவீந்திரன், நிர்வாகி ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Vathalakundu ,Northern Union ,K.P. Murugan ,City Secretary ,Chinnathurai ,Town ,Panchayat ,Chidambaram ,Vice Chairman ,Dharmalingam ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...