×

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.5,456 கோடிக்கு பட்ஜெட்: தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒப்புதல்

திருமலை: உலகப் பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆண்டு தோறும் பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி 2026- 27ம் நிதியாண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டிற்கான அறங்காவலர் குழு கூட்டம், தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்த நிதியாண்டிற்கு ரூ.5,456.26 கோடியில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், கடந்த 2025- 26ம் ஆண்டுக்கு ரூ.5,258.68 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகிப்பது, பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையாகும். இதில் கடந்த நிதியாண்டில் ரூ.1,738 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இந்நிலையில், இந்த நிதியாண்டில் ரூ.1,880 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Devasthanam ,Board of Trustees ,Tirumala ,P.R. Naidu ,
× RELATED வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும்...