×

வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலைக்குரியது; பல இந்தியர்கள் கப்பலில் மாலுமிகளாக உள்ளனர்: அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: போர் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆசியா, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாகும் என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ‘வளைகுடா பகுதியுடன் இந்தியா 200 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலைக்குரியது; பல இந்தியர்கள் கப்பலில் மாலுமிகளாக உள்ளனர். கப்பல்கள் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளார்’ என ஜெய்சங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்தியர்களுக்கு எச்சரிக்கை வழங்கி வருகிறது.

Tags : Minister ,Jaishankar ,Delhi ,West ,Asia ,India ,Gulf region ,
× RELATED ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய்...