கொடுமுடி, பிப்.28: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 47 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கருப்பு ரகம் கிலோ குறைந்தபட்சமாக ரூ98.90க்கும், அதிகபட்சமாக ரூ.175க்கும், சராசரி விலையாக ரூ.165க்கும், சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக 95 ரூபாய் 9 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.118.90க்கும், சராசரி விலையாக 107 ரூபாய் 59 காசுக்கும், இதேபோல் வெள்ளை ரகம் ஒரு கிலோ ஒரே விலையாக 126 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 3,433 கிலோ எள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 472 ரூபாய்க்கு விற்பனையானது.
