ஈரோடு, பிப்.26: ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் நேற்று முன்தினம் டவுன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே காவல் நிலையம் அருகே உள்ள பவர் ரூம் அருகில் கிடந்த பையை மீட்டு சோதனையிட்டனர். அதில், 450 கிராம மதிப்பிலான 75 கஞ்சா சாக்லேட்கள் இருப்பது தெரியவந்தது. அதை கடத்தி வந்தவர் யார் ? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. போலீசார் அந்தப் பையை மீட்டு விசாரித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
