- கூட்டமைப்பு
- வருவாய்
- தொழிற்சங்கங்கள்
- ஈரோடு
- வருவாய் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
- ஈரோடு தாலுகா
- அலுவலகம்
- கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்
- தமிழரசன்
ஈரோடு, பிப். 27: ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று 2வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் தலைமை வகித்தார்.
இதில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதில் இருந்தும் வருவாய்த்துறை, அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
