×

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

ஈரோடு,பிப்.27: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் – ஈரோடு மின்பகிர்மான வட்ட அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொறியாளர் கழகத்தின் நிர்வாகி வாசுதேவன் தலைமை வகித்தார்.

மற்றொரு நிர்வாகி கவிதா, செயலாளர் அருணாச்சலம், ஈரோடு மண்டலச் செயலாளர் சந்திரசேகரன்,பொறியாளர் சங்கச் செயலாளர் திருநீலகண்டன், ஐக்கிய சங்கத்தின் செயலாளர் பிரபு, மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. தலைவர் ஜோதிமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மின்சார வாரியத்திலிருந்து தொழிற்சங்கங்களுக்கு தரப்பட்ட ஊதிய உயர்வு முன்வரைவில் பிரிவு 1 மற்றும் 2ல் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது என்பதை உறுதிப்படுத்தி மின்வாரியம் முன் வரைவை அளித்திட வேண்டும் எனும் ஒன்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொறியாளர் கழக நிர்வாகி அருணாசலம் நன்றி கூறினார். இதில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Electricity Board Trade Unions Joint Action Committee ,Erode ,Tamil Nadu Electricity Board Trade Unions Joint Action Committee ,Tamil Nadu Electricity Board Supervising Engineer ,Erode Electricity Distribution Circle Office ,E.V.N. Road ,Engineers’ Association… ,
× RELATED வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்