×

பர்கூர் மலைப்பகுதியில் வேனில் பெட்டி, பெட்டியாக மது கடத்தியவர் கைது

அந்தியூர்,பிப்.27: பர்கூர் மலைப்பகுதியில் பெட்டி, பெட்டியாக மது கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.  பர்கூர் எஸ்ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் சேகர், நாராயணன் ஆகியோர் பர்கூர் சோதனை சாவடியில் வந்த ஒரு பிக்கப் வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 336 மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் மது கடத்தியவர் பர்கூர் மலைப்பகுதி மேல் தெருவை சேர்ந்த முருகன் என்கிற முருகராஜ்(47) என்பவர் என்று தெரியவந்தது. மேலும் இவர் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. மதுபாட்டில்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்த போலீசார் முருகராஜை கைது செய்தனர்.

 

Tags : Bargur hills ,Anthiyur ,Shekhar ,Narayanan ,Bargur ,SI Vijayakumar ,
× RELATED மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்