×

ரெத்தினங்குடி, தச்சங்குறிச்சியில் ரேஷன் கடை, பயணிகள் நிழலகம்

லால்குடி, பிப்.28: லால்குடி ஒன்றியம் ரத்தினங்குடியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடம் மற்றும் தச்சங்குறிச்சியில் பயனியர் நிழற்குடை கட்டிடம் எம் எல் ஏ சௌந்தர பாண்டியன் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் தச்சங்குறிச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழலகம் மற்றும் ஆர்.வளனூர் ஊராட்சி ரத்தினங்குடி கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தை லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா முன்னிலையில் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் ரத்தினங்குடி திமுக நிர்வாகிகள் பாஸ்கர், பாலு ஜோதி பிரகாஷ், சுதாகர் மற்றும் தச்சங்குறிச்சி நாகராஜ், செல்வம், சவரிமுத்து, சண்முகம், ராமர், சந்திரமோகன், செல்வராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Rathinangudi, Thachankurichi ,Lalgudi ,MLA ,Soundara Pandian ,Rathinangudi ,Lalgudi union ,Thachankurichi ,Trichy district… ,
× RELATED ஓடும் பஸ்சில் முதியவரிடம் பணம் பறித்தவர் கைது