×

மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ முன்னிலையில் தவெகவினர் திமுகவில் இணைந்தனர்

சமயபுரம், பிப்.26: மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சென்னகரை கிராமத்தைச் சேர்ந்த தவெகவினர் 30 பேர் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் நம்பர் 2 கரியமாணிக்கம் ஊராட்சி சென்னகரை கிராமத்தைச் சேர்ந்த தவெக வினர் 30க்கும் மேற்பட்டோர் எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைந்து கொண்டனர்.

கோவிந்தராஜ் தலைமையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு எம்எல்ஏ கதிரவன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் அம்பிகாபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Thavekas ,DMK ,Mannachanallur MLA ,Samayapuram ,Chennakarai ,Mannachanallur ,Kathiravan ,Mannachanallur union no. 2 ,Kariyamanickam panchayat, Trichy district… ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி