×

ஓடும் பஸ்சில் முதியவரிடம் பணம் பறித்தவர் கைது

திருச்சி,பிப்.28: ஓடும் பஸ்சில் முதியவரிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (60). இவர் பிப்.26ம் தேதி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில்வே ஜங்ஷன் பகுதிக்கு பஸ்ஸில் பயணம் செய்தார்.

அப்போது முதியவரின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.400ஐ மர்ம நபர் பறித்தார். உடனே பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பட்டர் வொர்த் ரோடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

 

Tags : Trichy ,Jayaraj ,Kajapettai Pasumadam ,Palakkarai, Trichy ,Chatthiram ,Railway Junction ,
× RELATED ரெத்தினங்குடி, தச்சங்குறிச்சியில் ரேஷன் கடை, பயணிகள் நிழலகம்