திருச்சி, பிப்.28:திருச்சியில் பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லால்குடி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சரவணன்(26). திருச்சி அண்ணா சிலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி அலுவலகம் முன் பைக்கை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது பைக் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
