×

துறையூரில் பருத்தி மறைமுக ஏலம்

துறையூர், பிப்.27: திருச்சி மாவட்டம் துறையூர் சிஎம்எஸ் வளாகத்தில் துறையூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் பருத்தி மறைமுக டெண்டர் மூலம் ஏலம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ஏலத்தில் 34 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் கலந்து கொண்டு, அதிகபட்சமாக பருத்தி ரூ.78 க்கு ஏலம் விடப்பட்டது. இதில் 15 விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை செய்துள்ளனர்.

ஏலத்தில் 1398.500 கிலோ பருத்தி ரூ.85,940க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கைக்கிணங்க வரும் வாரத்திலிருந்து வியாழக்கிழமை அன்று ஏலம் நடைபெறும். விவசாயிகள் தங்களது பருத்தியினை முதல்நாளே துறையூர் CMS சங்க வளாகத்திற்கு கொண்டு வரலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

Tags : Thuraiyur ,CMS ,Trichy district ,Thuraiyur District Agricultural Producers Cooperative Sales Association ,
× RELATED ரெத்தினங்குடி, தச்சங்குறிச்சியில் ரேஷன் கடை, பயணிகள் நிழலகம்