×

இலுப்பூர் பகுதியில் காணாமல் போன செல்போன் மீட்பு

இலுப்பூர், பிப்.28: இலுப்பூர் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட 11 செல்போன்களை இலுப்பூர் டிஎஸ்பி உரியவர்களிடம் வழங்கினார். இலுப்பூர் காவல் நிலைய உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 11 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இலுப்பூர் உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளான இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை பகுதியில் காணாமல் போன செல்போன்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டு காணாமல் போன 11 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதை அடுத்து இலுப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலுப்பூர் டிஎஸ்பி திவ்யா உரியவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலுப்பூர் காவல் ஆய்வாளர் கலா, அன்னவாசல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், விராலிமலை ஆய்வாளர் விஜயபாஸ்கர், இலுப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Illupur ,Illupur DSP ,Illupur Sub-Division… ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...