×

வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு பூச்சு மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை

ஆர்.கே.பேட்டை, பிப்.28: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜா நகரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (54). இவரது, 3வது மகள் வசந்தா (26) பிஎஸ்சி படித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இப்பெண், நீண்ட நாட்களாக வேலை கிடைக்கவில்லை என்பதாலும், திருமணம் ஆகவில்லை என்பதாலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்று வலியால் துடித்த வசந்தா, கடந்த ஜன.31ம் தேதி மாலை 5 மணியளவில் பூச்சி மருந்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், மயங்கிய வசந்தாவை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அப்பெண்ணிற்கு மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சையில் இருந்த அப்பெண்ணிற்கு, மேலும் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வசந்தா, கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : R.K.Petta ,Murugan ,Raja Nagar ,Union ,Vasantha ,TNPSC ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்