×

ரூ.63.23 கோடியில் அமைத்த புறவழிச்சாலை திறப்பு விழா

திருச்செங்கோடு, பிப்.28: தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில், ரூ.63.23 கோடியில் திருச்செங்கோடு நகருக்கு முதல் கட்டமாக 6.200 கி.மீ., நீளமுள்ள சாலையும், 2ம் கட்டமாக 12.800 கி.மீ., அளவுள்ள புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. 2ம் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையொட்டி, திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு, பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்டப்பொறியாளர் அகிலா, உதவி கோட்ட பொறியாளர் பூங்கொடி, பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் அரவிந்தன், திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், தாமரைச்செல்வன், அருண்குமார், இளங்கோ மற்றும் கொமதேக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruchengode ,Highways Department of the Tamil Nadu Government ,NABARD ,Rural Roads Unit ,
× RELATED புதியதாக நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி