நாமகிரிப்பேட்டை, பிப். 27: வெண்ணந்தூர் அருகே தொட்டியவலசு ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரங்கொரை, கொடம்பு ஆகிய பகுதிகளில் பைப்லைன் அமைத்தல், தொட்டியவலசு பகுதியில் தார்சாலை உள்ளிட்ட பணிகளுக்கு, ஊராட்சி பொது நிதியிலிருந்து சுமார் ரூ.21 லட்சத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் வட்டார அட்மா குழு தலைவர் துரைசாமி, பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், `மீண்டும் திமுக ஆட்சி அமைக்க மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,’ என்றார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வனிதா, மலர்விழி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜய் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
