×

தார்சாலை பணிகளை அதிகாரி நேரில் ஆய்வு

திருச்செங்கோடு, பிப்.28: திருச்செங்கோடு உட்கோட்டத்தில் ரூ.20 கோடியில் முடிவுற்ற நெடுஞ்சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்(2025-26) கீழ், மல்லசமுத்திரம் மற்றும் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் சசிகுமார் ஆய்வு மேற்கொண்டார். சாலையின் அகலம் மற்றும் டிபிஎம் கலவையின் தடிமன், அடர்த்தி மற்றும் உறுதித் தன்மை ஆகியவற்றை பார்வையிட்டார். ஆய்வின்போது, உதவி கோட்டப்பொறியாளர் நடராஜன் மற்றும் உதவிப் பொறியாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Thiruchengode ,Thiruchengode Subdistrict ,Construction and Maintenance Division ,Namakkal Highways Department ,Mallasamuthiram ,
× RELATED புதியதாக நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி