- சுஷ்ருத் அரவிந்த் தர்மடிகாரி
- தலைமை நீதிபதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- நீதிபதி
- Icourt
- எம்.எம். ஸ்ரீவஸ்தவா
- எம்.
- ஸ்ரீவஸ்தவா
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5ல் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ஓய்வு பெறும் நிலையில் புதிய தலமை நீதிபதி பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. கேரளா ஐகோர்ட் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததும் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்றுக்கொள்வார்.
நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தர்மாதிகாரி மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். 1992 முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார்
2000ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2016-ல் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018-ல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போதையை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஷ்தவாவின் பதவிக்காலம் மார்ச் 5 உடன் நிறைவடையும் நிலையில் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததும் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
