×

பாளையில் சமுதாய வளைகாப்பு விழா

*அப்துல்வஹாப் எம்எல்ஏ சீதனம் வழங்கினார்

நெல்லை : நெல்லை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டை சுபம் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ, பெண்களுக்கு வளைகாப்பு சீதனம் வழங்கி, வாழ்த்தினார்.

நிகழ்வில் நெல்லை கிழக்கு மாநகர திமுக பொறுப்பாளர் தினேஷ், பகுதி செயலாளர்கள் சையது முகைதீன், துபாய் சாகுல் ஹமீது, டாக்டர் சங்கர், சாமுவேல், மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மகேஸ்வரி கதீஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் பேச்சியம்மாள், இந்திரா மணி, சுப்புலட்சுமி குணா, சின்னத்தாய் கிருஷ்ணன், வசந்தா ஜெகதீஸ்வரன், சீதா பாலன், ஷர்மிளா கமாலுதீன், ஷபி அமீர் பாத்து, அம்பிகா முத்து, கருப்பசாமி கோட்டையப்பன், முத்து சுப்பிரமணியன், அலிஷேக் மன்சூர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா, பாளையங்கோட்டை பகுதி இலக்கிய அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், இளைஞர் அணி கணேஷ் தேவேந்திரன், பீரப்பா, ரவி சண்முகம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : Community Babysitting Ceremony ,Abdulwahab ,MLA Sidanam ,Nella ,Nella District Department of Social Welfare and Women's Rights ,Chubam Wedding Hall ,Palayangkot ,Rice ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை...