×

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்கம்

*பொதுமக்கள் ஆர்வம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு முறையும் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது, வருவாய்துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் இப்போதிலிருந்தே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவில் வாக்காளர்கள் வாக்களித்த சின்னம் மற்றும் முழு விவரம் தெரியும் வகையிலும் வாக்கை மாற்றி போடுவதை தடுக்கும் வகையிலும் குறித்த மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதிலும் குக்கிராமங்கள்தோறும் தனி வாகனத்தில் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

அந்த மாதிரி வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்தியதுடன் புதிய மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர்.

இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலின்போது மின்னணு இயந்திரம் மூலம் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இதையொட்டி, இப்போதே வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. அதில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பது குறித்த முழு விவரம் துண்டு சீட்டு போன்று தெரியவரும்.

இதன் மூலம், ஒருவரின் வாக்கை பிறர் போடுவது தடுக்கப்படும். மேலும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என சந்தேகமின்றி செல்லலாம். பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலா 5 பேர் கொண்ட குழுவினர் தேர்தல் வரை பொதுமக்கள் கூடும் இடங்களில் புதிய மின்னணு வாக்குப்பதிவு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது’’ என்றனர்.

Tags : Pollachi ,Valparai ,Kinathukadavu ,Revenue Department ,
× RELATED ஆண்டிபட்டியில் ரூ.3.50 கோடியில் புதிய...