×

உடையநாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்

பேராவூரணி, பிப்.27: பேராவூரணி அருகே உள்ள உடையநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறிஞ்சி மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் எழுதுபொருள் வழங்கப்பட்டது. உடையநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேராவூரணியில் இயங்கி வரும் குறிஞ்சி மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவன தலைவர் வக்கீல் உத்தமகுமரன் மாணவர்களுக்கு பேனா, நோட்டு, ஜாமன்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

அப்போது, பொதுத்தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொண்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சோமு, தீபன் சக்கரவர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Udayanadu Government School ,Peravoorani ,Udayanadu Government High School ,Kurinji People’s Development Trust ,Udayanadu Government High School… ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...