- Veppanahalli
- கொட்டாவூர்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- கர்நாடக
- இடிபள்ளி
- Kollapalli
- தாசிரிகனபள்ளி
- நெரலகிரி
- சீரனபள்ளி
- சிங்கிரிப்பள்ளி
- எப்பிரி
- கங்கமடுகு…
வேப்பனஹள்ளி பிப்.27: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி கிராமமான கொட்டாவூர் வனப்பகுதியில், இரண்டு ஆண் யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் இடிப்பள்ளி, கொல்லப்பள்ளி, தாசிரிகானப்பள்ளி, நேரலகிரி, சீரனப்பள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்பிரி, கங்கமடுகு ஆகிய பகுதிகளில் நடமாட வாய்ப்புள்ளது. எனவே, ேமற்காணும் பகுதியில், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல், வேப்பனஹள்ளி அருகே, ஆந்திர மாநில எல்லையோர வனப்பகுதி கிராமங்களான கே.கொத்தூர், கொங்கனப்பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த ஒற்றை யானை, இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இந்த ஒற்றை யானையை வனத்துறையினர் ஏக்கல்நத்தம் வனப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர். ஏக்கல்நத்தம் வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்ட ஒற்றை யானை மீண்டும் இப்பகுதிக்கு திரும்பி வர வாய்ப்புள்ளதாகவும், எனவே, விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
