×

பகுதிநேர ரேஷன்கடை திறப்பு

தேன்கனிக்கோட்டை, பிப்.25: தேன்கனிக்கோட்டை அருகே முனுவனப்பள்ளி கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடையை உயர் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார். அகலக்கோட்டையில் நர்சரிகளை பார்வையிட்டு ரோஜா செடி உற்பத்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், காரண்டப்பள்ளி ஊராட்சி முனுவனப்பள்ளி கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், ராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலுரெட்டி, திவாகர், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thenkani Kottai ,Higher Education Minister ,Munuvanapalli ,Kovi Chezhiyan ,Thali ,Krishnagiri district ,DMK ,
× RELATED விளைச்சல் அதிகரிப்பால் புளி விலை குறைய வாய்ப்பு