×

போச்சம்பள்ளியில் 4,623 கிலோ கொப்பரை ரூ.5.85 லட்சத்திற்கு ஏலம்

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 4623 கிலோ கொப்பரை, கிலோ அதிகபட்சம் ரூ.162-க்கும், குறைந்தபட்சம் ரூ.60.99-க்கும், சராசரியாக ரூ.150-க்கும் விற்பனையானது. அதன்படி ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 345-க்கு விற்பனையானது. இது குறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், `இ-நாம் முறையில் நடந்த ஏலத்தில், கொப்பரை நல்ல விலைக்கு போனது. விற்பனை செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இங்கு பருத்தி மற்றும் நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் நடைபெற உள்ளதால், விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்,’ என்றார்.

Tags : Pochampally ,Krishnagiri ,Pochampally Regulated Sale Hall, Krishnagiri district ,NAM ,
× RELATED விளைச்சல் அதிகரிப்பால் புளி விலை குறைய வாய்ப்பு