×

உரிய அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, பிப்.27: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை சின்னமேலுப்பள்ளி பகுதியில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி எருதுவிடும் திருவிழா நடந்தது. இதுபற்றி மகாராஜகடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (68), அர்ஜூன் (33), நடராஜ் (60), மூக்கன் (37), ராஜா (51) ஆகிய 5 பேர் மீது, எஸ்ஐ பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Krishnagiri ,Chinnamelupalli ,Maharajakadai ,Krishnagiri district ,Arumugam ,
× RELATED விளைச்சல் அதிகரிப்பால் புளி விலை குறைய வாய்ப்பு