×

181 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

காவேரிப்பட்டணம், பிப்.25: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாபு கலந்து கொண்டு பிளஸ் 1 படிக்கும் 181 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் துரை நாகராஜ், கார்த்திகேயன், பசுபதி, மீனாட்சி, பூங்காவனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹேமமாலினி தலைமை இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவி விமலா, உதவித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன் பங்கேற்று, பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

Tags : Kaveripatnam ,Tamil Nadu government ,Kaveripatnam Government Boys’ Higher Secondary School ,Headmaster ,Vendan ,Vice President ,Parents Teachers Association ,Elangovan ,Parents Teachers Association… ,
× RELATED விளைச்சல் அதிகரிப்பால் புளி விலை குறைய வாய்ப்பு