×

ஒட்டன்சத்திரம் அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம், பிப். 26: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் கேதையுறும்புக்கு சென்று கொண்டிருந்தார். பாய் தோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரில் வந்த சரக்கு வாகனம் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Ottanchathram ,Suresh ,Salaiputhur ,Kethaiyurumba ,Bai Thottam ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...