- மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
- பட்டுக்கோட்டை
- பட்டுக்கோட்டை மின்சார வாரியம்
- மனோகரன்
- மின்சார நுகர்வோர் குறை தீர்க்கும் பணி
- மின்சார வாரியம்
- பாளையம்
- தஞ்சாவூர்...
பட்டுக்கோட்டை, பிப்.26: பட்டுக்கோட்டை மின்சாரவாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சித்ரா தலைமை வகிக்கிறார். எனவே இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துக்கூறி தீர்வு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
