×

காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு தலை, கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆற்றில் கிடந்த ஆண் சடலம் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை

காட்டுமன்னார்கோவில், பிப். 26: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி காவல் எல்லைக்கு உட்பட்ட அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் தலை, கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குமராட்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குமராட்சி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இறந்து போன நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எனவும், மேலும் ஆற்றில் உடலை மீட்கும்போது பல முதலைகள் தென்பட்டதால் முதலைகள் கடித்து கொன்றுள்ளனவா? அல்லது மர்ம நபர்கள் எவரேனும் கொலை செய்து ஆற்றில் வீசினரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் தலை, கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்த சம்பவம் காட்டுமன்னார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kattumannarkovil ,Kollidam river ,Attipattu ,Kumaratchi ,Cuddalore district ,Kumaratchi… ,
× RELATED வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி