×

கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், பிப்.26: கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 843 பேர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். நாமக்கல் மாவட்டத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 2வது நாளாக கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர் செங்கமலை, இளங்கோ ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மாலை 5 மணி வரை நீடித்த போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார் உள்பட 843 பேர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள், கடந்த காலங்களில் கலெக்டர் ஆபீஸ் நுழைவு வாயில் படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதனால், பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலெக்டர் ஆபீசுக்குள் செல்ல முடியாமல் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்படும். கடந்த வாரம் வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தியபோது, மாவட்ட கலெக்டர் காரில் வந்தார். அவரது காரை சுற்றி நின்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று போலீசார் முன்னெச்சரிக்கையாக கலெக்டர் ஆபீஸ் போர்டிகோவில் 2 காரை நிறுத்தி வைத்து, அடைத்து விட்டனர். இதனால், வருவாய்த்துறையினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் செய்தனர்.

Tags : Revenue Department ,Namakkal ,Federation of Revenue Department Unions ,
× RELATED வையப்பமலை பாலசுப்பிரமணிய சுவாமி...