×

சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் திருவீதி உலா

திருச்செங்கோடு, பிப்.23: திருச்செங்கோட்டில், புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முதல் முறையாக அர்த்தநாரீஸ்வரர் அருள் வேண்டி, ஓங்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் அம்மன் பல்லக்கில் முன் செல்ல ஒருவர் பின் ஒருவராக திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் சாந்தி முத்துக்குமார், சின்னமாரியம்மன் கோவில் விழா குழு தலைவர் ராஜா, தேர்த்திருவிழா குழு தலைவர் முத்து கணபதி, நகர் மன்ற உறுப்பினர்கள் சினேகா ஹரிஹரன், திவ்யா வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chinna ,Ongaliyamman ,Temple ,Tiruchengod ,Trichenkot ,Chinna Ongaliyamman Masi Kundam festival ,Ongalyamman Temple ,Arthnarishwarar ,Amman ,Ballak ,
× RELATED வையப்பமலை பாலசுப்பிரமணிய சுவாமி...