நாமகிரிப்பேட்டை, பிப்.25: வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் அதிகரித்து வரும் சேர்க்கை மற்றும் எதிர்கால கல்வி தேவையை கருத்தில் கொண்டு, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில், 8 புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய அட்மா குழு தலைவர் துரைசாமி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய கட்டிட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
